இலங்கை
இலங்கை ரயில்வே ஊழியர்களின் போராட்டம்!
இலங்கை ரயில்வே ஊழியர்களின் போராட்டம்!
அரசாங்கம் தமது கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர்ந்து வரும் தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவோம் என இலங்கை ரயில்வே ஊழியர்கள், சங்கஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சங்க நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதால், பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும் என்றும் சங்கத்தின் செயலாளர் கே.டி.டி. பிரசாத் மேலும் தெரிவித்தார்.
பணி வெற்றிடங்களுக்கு உரிய ரயில்வே அதிகாரிகளை நியமித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை ரயில்வே ஊழியர்கள் சங்க அதிகாரிகள் நேற்று 18 ஆம் திகதி முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.