இலங்கை

இஷாரா செவ்வந்தியின் நிழலில் சிக்கிய தக்ஷி

Published

on

இஷாரா செவ்வந்தியின் நிழலில் சிக்கிய தக்ஷி

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் தடுப்பு காவிலில் உள்ள இஷாரா செவ்வந்தி கிளிநொச்சி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இஷாராவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அனுமதி வழங்கிய நிலையில், சஞ்சீவ கொலைக்குப் பிறகு அவர் பல நாட்கள் மறைந்திருந்ததாகக் கூறப்படும் இடங்களை ஆய்வு செய்ய அழைத்துச் செல்லப்பட்டார்.

Advertisement

இதற்கிடையில், கெஹல்பத்தர பத்மேவின் அறிவுறுத்தலின் பேரில் இஷாராவைப் போன்ற தோற்றமுடைய ஒரு இளம் பெண்ணைத் தேடிய ஜப்னா சுரேஷ், ‘தக்ஷி’ என்ற பெண்ணைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

அவருக்கு சிங்களம் பேசத் தெரியாத நிலையில், வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகவும் கூறி சுரேஷ் அந்த பெண்ணை நேபாளத்திற்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தக்ஷிக்கு தெரியாமலேயே அவர் நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version