இலங்கை

எரிபொருள் கொடுப்பனவு வேண்டாம்! பிரதமர் உட்பட 48 எம்.பிக்கள் வலியுறுத்தல்!

Published

on

எரிபொருள் கொடுப்பனவு வேண்டாம்! பிரதமர் உட்பட 48 எம்.பிக்கள் வலியுறுத்தல்!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உட்பட 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமக்கு  நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், நாடாளுமன்ற உதவிப் பொதுச் செயலாளரும் தகவல் அதிகாரியுமான ஹன்ச அபேரத்ன இந்த விபரங்களை வழங்கியுள்ளார்.
அதன்படி, இந்த 48 பேரில், 13 பேர் கடந்த மார்ச் மாதம் முதல் தமது கொடுப்பனவை நிறுத்துமாறும், 16 பேர் ஏப்ரல் மாதம் முதல் நிறுத்துமாறும் கோரியுள்ளனர். மீதமுள்ளோர் மே, ஜூன், ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் இருந்து எரிபொருள் கொடுப்பனவை நிறுத்தக் கோரியுள்ளனர்.

Advertisement

மேலும், அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர்களான இராமலிங்கம் சந்திரசேகர், வசந்த சமரசிங்க, அனில் ஜயந்த, தம்மிக பட்டபெந்தி, நாமல் கருணாரத்ன, மற்றும் உபாலி சமரசிங்க ஆகியோர் கடந்த செப்டெம்பர் மாதம் முதலே தமக்கு எரிபொருள் கொடுப்பனவு தேவையில்லை என நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version