இலங்கை
”கம்பஹா பபா” வழங்கிய தகவலில் மீட்கப்பட்ட தோட்டாக்கள்!
”கம்பஹா பபா” வழங்கிய தகவலில் மீட்கப்பட்ட தோட்டாக்கள்!
நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான ‘கம்பஹா பபா’ என்ற சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, T-56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 50 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் விசாரிக்கப்படும் கம்பஹா பபா நேற்று 18ஆம் திகதி பேலியகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, கந்தானை – கெரவலப்பிட்டி அதிவேக வீதியின் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள வடிகால் கட்டமைப்பில் இருந்து சுமார் 50 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த தோட்டாக்கள் கெஹெல்பத்தர பத்மேவினால் தமக்கு வழங்கப்பட்டதாக அவர் விசாரணையில் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தோட்டாக்களை வெலிசறை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.