இலங்கை
கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் கொடூரமாக வெட்டிக் கொலை!
கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் கொடூரமாக வெட்டிக் கொலை!
கிளிநொச்சியில் அக்கராயன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்கந்தபுரம் ஈச்சங்குளம் பகுதியில் முற்பகை காரணமாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் குறித்த நபர், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது மதிப்பிடத்தக்க ஒரு பிள்ளையின் தந்தையான கௌரிராஜன் கஜன் எனும் இளம் குடும்பஸ்தரே இவ்வாறு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பில் அக்கராயன் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி நீதிமன்ற நீதவானின் உத்தரவுக்கு அமைய சடலத்தின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அக்கராயன் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.