சினிமா
கொளுத்துங்கப்பா வெடிய.. இதுதான் தீபாவளி ஸ்பெஷல்.! வைரலான “கருப்பு” பட பாடல்
கொளுத்துங்கப்பா வெடிய.. இதுதான் தீபாவளி ஸ்பெஷல்.! வைரலான “கருப்பு” பட பாடல்
தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாக தற்போது பேசப்படும் திரைப்படம் தான் ‘கருப்பு’ . இந்த படத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பதே ரசிகர்களுக்கு ஒரு விசேஷம்.மேலும் இந்த படம், நகைச்சுவை நடிகர் மற்றும் இயக்குநராக பிரபலமான RJ பாலாஜியின் இயக்கத்தில் உருவாகிறது என்பதும் ரசிகர்களிடம் புதியதொரு சுவாரஸியத்தைக் கிளப்பியுள்ளது.இந்நிலையில், ‘கருப்பு’ படத்தின் முதல் பாடல் (First Single) ஆன ‘God Mode’ இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் இந்த பாடல் ஒரு பவுர்ணமி பாஸ் எனக் கூறலாம். சாய் அபயங்கரின் சரவெடியான இசை, வரிகள் மற்றும் சூர்யாவின் ஸ்கிரீன் ப்ரெஸன்ஸ் என அனைத்தும் இணைந்த ஒரு ஸ்டைலிஷ் இசை வெளியீடு இது!‘God Mode’ என்பது சாதாரண ஒரு மாஸ் பாடல் அல்ல. இது ஒரு கதாபாத்திரத்தின் மாற்றத்தையும், வீரத்தையும், திடமான மனப்பக்குவத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் தற்பொழுது யூடியூபில் வைரலாகி வருகின்றது.