இலங்கை
கொழும்பில் குஷ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது
கொழும்பில் குஷ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது
கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிமுத்து உயன குடியிருப்பு தொகுதிக்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 09 கிலோ 555 கிராம் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இந்த சோதனை நடத்தப்பட்டது.
சந்தேகநபர் கொழும்பு 14 ஐச் சேர்ந்த 27 வயதான இளைஞன் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.