இலங்கை

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைக்க அரசாங்கத்திடம் கோரிக்கை!

Published

on

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைக்க அரசாங்கத்திடம் கோரிக்கை!

உலக தங்கச் சந்தையில் அதிகரித்து வரும் விலை உயர்வை ஈடுசெய்ய, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய  தற்போதுள்ள 15 சதவீத வரியை 5 சதவீதமாகக் குறைக்குமாறு, இலங்கையின் இரத்தினக் கற்கள் மற்றும் நகைத்துறையினர் அரசாங்கத்திடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விலையேற்றத்தால் உள்ளூர் விலைகளில் ஒரு போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து, விநியோகம் தடைப்பட்டு, சிறு நகை வியாபாரிகள் சிரமப்படுகிறார்கள்.

இந்த நிலையில், நிதி அமைச்சகத்துக்கு, கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளபோதும், இதுவரை எந்த நடவடிக்கையோ அல்லது முடிவும் எடுக்கப்படவில்லை என்று இலங்கை இரத்தினக் கற்கள் மற்றும் நகை  வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version