சினிமா

தல தீபாவளியை சிறப்பாக கொண்டாடிய வெற்றி வசந்த் ஜோடி.. வெளியான க்யூட் போட்டோஸ்

Published

on

தல தீபாவளியை சிறப்பாக கொண்டாடிய வெற்றி வசந்த் ஜோடி.. வெளியான க்யூட் போட்டோஸ்

சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் வெற்றி வசந்த். இவர் பல போராட்டங்களுக்குப் பின்பு சீரியல் துறைக்குள் நுழைந்துள்ளார். தற்போது இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற கனவுடன் பயணித்த வெற்றி வசந்துக்கு ஆரம்பத்தில் தோல்விகளே கிடைத்தன. இதனால் வாட்ச்மேன் தொழில், தையல் தொழில் செய்ததாக கூட தெரிவித்திருந்தார்.  அதன் பின்பு சீரியலில் நடிக்க விருப்பமில்லை என்றாலும் சினிமா மீது கொண்ட ஆசையால் சீரியலுக்குள் நுழைந்துள்ளார்.ஒரு நல்ல திரைப்பட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சீரியலுக்குள் நுழைந்ததாக பேட்டி ஒன்றில் வெற்றி வசந்த் தெரிவித்திருந்தார்.  இவரை சின்னத்திரை விஜய் சேதுபதி என்று சிலர் ஒப்பிடுகின்றனர். ஆனாலும் அதனை அவர் மறுத்து உள்ளார்.வெற்றி வசந்த் பொன்னி சீரியலில் நடித்த வைஷ்ணவியை காதலித்து  திருமணம் செய்தார்.  இந்த திருமண செய்தி சின்னத்திரை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.இந்த நிலையில், வெற்றி வசந்த் தனது மனைவி வைஷ்ணவியுடன்  இணைந்து அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளதோடு,  இன்ஸ்டா  பக்கத்தில் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த ஜோடிக்கு பலரும் தங்களுடைய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version