பொழுதுபோக்கு

திவாகருக்கு விழுந்த செக், எலிமினேட் ஆன அப்சரா; கம்ருதின் – ஆதிரை மோதல்: விஜய் சேதுபதி ரியாக்ஷன் அப்டேட்!

Published

on

திவாகருக்கு விழுந்த செக், எலிமினேட் ஆன அப்சரா; கம்ருதின் – ஆதிரை மோதல்: விஜய் சேதுபதி ரியாக்ஷன் அப்டேட்!

பிகபாஸ் நிகழச்சியின் 9-வது சீசன் தொடங்கி 15 நாட்கள் முடிந்துள்ள நிலையில், வார இறுதி நாளான நேற்று, யார் எலிமினேட் செய்யப்பட்டார்? நேற்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக சமூகவலைதளங்களில் பிரபலமான நபர்கள் அதிகம் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில், வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர், வி.ஜே.பார்வதி, இன்ஸ்டா பிரபலம் பலூன் அக்கா, அகோரி கலையரசன் என பலர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் பங்கேற்றதால் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கடுமையாக விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம், நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பது குறித்து கவனித்தும் வருகின்றனர். அதேபோல் கடந்த 7 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், போட்டியாளர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை சொல்லவும் அவர்களுக்கு பேசவும் அனுமதி அளிப்பார். ஆனால் விஜய் சேதுபதி அப்படி இல்லை என்ற விமர்சனமும் இருக்கிறது. அதேபோல் இந்த நிகழ்ச்சியின் பாதியில், விஜய் சேதுபதி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிடுவார் என்று நிகழ்ச்சியில் இருந்து ஒரே நாளில் வெளியேற்றப்பட்ட இயக்குனர் பிரவீன் காந்தி கூறியுள்ளார். ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பது குறித்து நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பு அதிகமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நந்தினி 5 நாட்களில் தானாக வெளியேறிய நிலையில், முதல் வாரம் முதவில், இயக்குனர் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டார், அதனைத் தொடர்ந்து, நேற்றைய எபிசோட்டில், முதல் 15 நாட்கள் எப்படி இருந்தது என்று போட்டியாளர்கள் மகிழ்ச்சியாக பேசிய நிலையில், இதில் கானா வினோத், தூக்கமின்மை, மன குழப்பம், சக போட்டியாளர்களின் குறட்டை சத்தம் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து கானா வினோத் – திவாகர் இடையே இருக்கும் நட்புறவை விஜய் சேதுபதி பாராட்டினார். அதே சமயம், திவாக்கருடன் நடக்கும் ராம்ப் வாக் தனக்கு பிடிக்கவில்லை என்று பார்வதி வெளிப்படுத்தினார். ஆனால் அதை அவர் வெளிப்படையாக சொல்லாதது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளனது. அதன்பிறகு கேப்டன் பற்றிய விவாதம் தொடங்க, துஷார் குறித்து பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதற்கு விஜய் சேதுபதி இது உங்க வீடு இல்ல, பொதுவான இடத்தை பயன்படுத்தும்போது நாகரீகம் தேவை என்று, மேஜை மீது உட்கார்ந்து பேசியது குறித்து கண்டனம் தெரிவித்தார் விஜய் சேதுபதி. தலைவர் துஷார் பிரச்னைகள் குறித்து பேசாமல் ஒரு சார்பாக நடந்துகொண்டார் என்று போட்டியாளர்கள் கூறியுள்ளனர். சாப்பாட்டில் உப்பு அதிகம் இருப்பது குறித்து சுபிக்ஷா வியன்னா இருவரும் புகார் சொல்ல, உப்பு அதிகமானதால் சாப்பாடு வீணாவது குறித்து விஜய் சேதுபதி விசாரித்தார். ஆனால் சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்படுவதை உணர்த்தவே இவ்வாறு செய்ததாக கனி கூறியுள்ளார். அடுத்து பசி பொறுக்காமல் சமையல் குறித்து பேசியபோது, கேப்டன்ஷிப் பற்றி பேசும்போது சம்பந்தம் இல்லாமல் பேசாதீங்க என்று விஜய் சேதுபதி அவரை ஆஃப் செய்தார். அதன்பிறகு இந்த வார எலிமினேஷனில் அப்சரா வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். விஜய் சேதுபதி சென்றவுடன், கம்ருதீன், ஆதிரை இடையே பெரிய சண்டை வெடித்ததது, தன்னை பலூன் அக்கா என்று அழைப்பதற்கு ஆதிரை கடும் எதிர்ப்பு தெரிவித்தார், ஆனால் பணம் சம்பாதிக்கவே இங்கு வந்தேன். பலூன் அக்கா என்பதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்று பதிலடி கொடுத்துள்ளனர். இதன் மூலம் நேற்றைய எபிசோடு கலகலப்பாகவும் பரபரப்பாகவும் சென்றது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version