இலங்கை

தீபாவளியை முன்னிட்டு 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி உலக சாதனை படைத்த அயோத்தி!

Published

on

தீபாவளியை முன்னிட்டு 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி உலக சாதனை படைத்த அயோத்தி!

அயோத்தி சரயு நதிக்கரையில் 29 லட்சம் அகல் விளக்குகள் நேற்றைய  தினம் ஏற்றி புதிய உலக சாதனை படைக்கப்பட்டது.  இதன் போது ஒரே நேரத்தில் 2,128 அர்ச்சகர்கள் நடத்திய பிரம்மாண்ட ஆரத்தி வழிபாடும் உலக சாதனை படைத்துள்ளது.

தீபாவளியையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.  இதன் ஒரு பகுதியாக ராமர் கோயில் வளாகத்தில் 22 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. ராமாயணக் காட்சிகள், கும்ப மேளா, மகளிர் முன்னேற்றம், பிரம்மோஸ் ஏவுகணை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்ட ஊர்திகள் பார்வையாளர்களை மிகவும்  கவர்ந்தன.

Advertisement

அயோத்தி சரயு நதிக் கரையின் 56 படித்துறைகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  மாலை  29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. இதற்காக 73,000 லிட்டர் எண்ணெய், 55 லட்சம் பருத்தி திரிகள் பயன்படுத்தப்பட்டதுடன் 33,000-க்கும் மேற்பட்ட தன்னார் வலர்கள் விளக்குகளை ஏற்றினர். 

1,100 ட்ரோன்கள் மூலம் சிறப்பு கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் ராமர், அனுமன், ராமர் பாலம், அயோத்தி கோயில் போன்ற உருவங்களையும்  மக்கள்  கண்டு ரசித்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version