சினிமா

நடிகனாகும் கனவே இல்லாமல் இருந்தேன்… என்னை மாற்றியது அர்ஜுன் சார் தான்.! விஷால் பகீர்

Published

on

நடிகனாகும் கனவே இல்லாமல் இருந்தேன்… என்னை மாற்றியது அர்ஜுன் சார் தான்.! விஷால் பகீர்

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷால், சமீபத்திய ஒரு பேட்டியில் தனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றிய நாயகன் குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.சாதாரணமாக நடிகராக அறிமுகமாகும் பலரும் சிறிய பயணத்துடன் தங்களது வாய்ப்புகளை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் விஷால், அப்படிப்பட்ட சாதாரண துவக்கமல்ல; ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் ஆகவே தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் என்பது பலருக்கும் தெரியாத தகவலாகும்.பேட்டியில் விஷால், “நான் நடிகராக வரவேண்டும் என்ற இலக்கோடு இங்கு வரவில்லை. என் கனவு டைரக்டர் ஆக வேண்டும் என்பது தான். அதற்காகவே நான் சினிமா உலகில் காலடி வைத்தேன். அசிஸ்டென்ட் டைரக்டர் ஆகவே வேலை பார்க்கத் தொடங்கினேன். ஆனால் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை  ஏற்படுத்தியவர் நடிகர் அர்ஜுன் சார் தான்.” என்று கூறியிருந்தார். அர்ஜுன் நடிப்பில் ஒரு படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றிக் கொண்டிருந்த விஷாலை, நடிகர் அர்ஜுன் சார் ஒரு காட்சிக்காக அழைத்தார். “விஷால்… கிளாப் போடு… இப்போ நடி!” என்று அர்ஜுன் சார் சொன்னார். விஷால் சொல்வதைப் போல, அது ஒரு சிறிய காட்சி. ஆனால் அதற்குள், அர்ஜுன் நுணுக்கமாக விஷாலின் screen presence, expressions, confidence ஆகியவற்றை கவனித்திருக்கிறார். அதன்பின் அர்ஜுன் மிக உறுதியாக விஷாலிடம் நடிக்குமாறு கூறியுள்ளார். இந்தத் தகவல்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version