சினிமா
பல நாள் காத்திருப்பிற்கு கிடைத்த சூப்பரான அப்டேட்! காந்தா ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு
பல நாள் காத்திருப்பிற்கு கிடைத்த சூப்பரான அப்டேட்! காந்தா ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு
தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியிருக்கும் நடிகர் துல்கர் சல்மான், தற்போது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய படமான ‘காந்தா’ மூலம் திரைக்கு வர தயாராகிறார்.இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.‘காந்தா’ திரைப்படம், pan-Indian மாதிரியான பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. தனித்துவமான கதையமைப்புடன் , நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், நான்கு முக்கிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படுவதால், ரசிகர்கள் எல்லா பாகங்களிலும் காத்திருக்கின்றனர்.இந்த திரைப்படத்தை வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளன.துல்கர் சல்மான், மலையாள சினிமாவில் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் தனது தனிப்பட்ட நடிப்புத் திறனாலும், ஸ்டைலிஷ் தோற்றத்தாலும் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தவர். இந்நிலையில் காந்தா திரைப்படம் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.