பொழுதுபோக்கு

பழைய கேங்ஸ்டர், புதிய வில்லன்ஸ்; 300 கோடி வசூல் செய்த பெரிய ஹிட் படம்: ஒ.டி.டி தளத்தில் மிஸ் பண்ணாதீங்க!

Published

on

பழைய கேங்ஸ்டர், புதிய வில்லன்ஸ்; 300 கோடி வசூல் செய்த பெரிய ஹிட் படம்: ஒ.டி.டி தளத்தில் மிஸ் பண்ணாதீங்க!

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று ரூ300 கோடிக்கு மேல் வசூல் செய்த, ஒரு படம் தற்போது ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளர். திரையரங்குகளில் பார்த்து ரசித்த ரசிகர்கள் பலரும் தற்போது ஒடிடி தளத்தில் படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றிப்படமாக அமைந்த தே கால் ஹிம் ஓஜி திரைப்படம் தான் ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. பிரபாஸ நடிப்பில் சா    ஹோ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் சுஜீத் இயக்கத்தில், டி.வி.வி. என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில், பவன் கல்யாணுடன், ப்ரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஷ்ரியா ரெட்டி, பிரகாஷ் ராஜ், அபிமன்யு சிங், சுதேவ் நாயர், மற்றும் ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.செப்டம்பர் 25-ந் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது இந்த படம் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. திரையரங்கில் படத்தைப் பார்க்கத் தவறிய ரசிகர்கள், அக்டோபர் 23, 2025 முதல் நெட்ஃபிக்ஸ் (Netflix) தளத்தில் படத்தைப் பார்க்கலாம். இந்த படம் தெலுங்குப் பதிப்புடன், இந்தி, தமிழ், கன்னடம், மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்ட வெர்ஷனும் வெளியாக உள்ளது.  1970-களில் ஜப்பான் மற்றும் பம்பாயில் (மும்பை) நடப்பது போன்ற திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தில், தன் டோஜோவில் நடந்த கொடூரத் தாக்குதலில் இருந்து தப்பித்து இந்தியாவுக்கு வரும் ஒரே உயிர் பிழைத்தவரான ஓஜஸ் கம்பீராவைப் சுற்றி கதை நடக்கிறது. கப்பலில் பயணிக்கும்போது, அவர் விலைமதிப்பற்ற சரக்குகளை ஏற்றிச் செல்லும் சில தொழிலதிபர்களைச் சந்திக்கிறார், அவர்களது முயற்சிகளில் ஈடுபடுகிறார்.ஆண்டுகள் செல்லச் செல்ல, அவர் அவர்களுக்குப் பாதுகாப்பையும் வழிகாட்டுதலையும் வழங்க, அவர்களது வணிகம் செழிக்க உதவுகிறது.இருப்பினும், போட்டி மனப்பான்மையும், கட்டுப்பாடு மற்றும் முரண்பட்ட நலன்கள் தொடர்பாக பதட்டங்களும் எழுகின்றன. தலைமுறை மோதல்களும் குற்றவியல் லட்சியங்களும் அவர்களது சாம்ராஜ்யத்தின் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துகின்றன. இது கதாபாத்திரங்களை விசுவாசம், அதிகாரம், மற்றும் நீதி போன்றவற்றை எதிர்கொள்ளத் தூண்டுகிறது. விரைவில் வரவிருக்கும் நெட்ஃப்ளிக்ஸ் வெளியீட்டின் மூலம், ஓ.ஜி. திரைப்படம் வீட்டில் இருந்தபடியே பல மொழிகளில் பார்க்கும் வாய்ப்பை ரசிகர்களுக்கு வழங்குகிறது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version