இலங்கை

மாலைதீவில் இலங்கையர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழப்பு!

Published

on

மாலைதீவில் இலங்கையர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழப்பு!

 மாலைதீவில் பேக்ஹோ இயந்திரம் இயக்குபவராக பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாலைத்தீவில் உள்ள மற்றொரு தீவுக்கு பேக்ஹோ இயந்திரம் மூலம் பயணித்த போது, ​​அவர் பயணித்த படகு கவிழ்ந்ததில் உயிரிழந்துள்ளார். குருநாகல், பண்டுவஸ்நுவர பகுதியை சேர்ந்த டி.எம். பிரதீப் சஞ்சீவ என்ற 36 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

Advertisement

கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவர் மாலைத்தீவுக்குப் சென்றுள்ளார். அங்கு பேக்ஹோ இயந்திரம் இயக்குபவராக பணியாற்றியுள்ளார் . அவர் 2 நாட்களாக மாலே பகுதியில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த புதன்கிழமை இரவு, படகு அலைகளில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 
படகில்  07 பேர் இருந்த நிலையில்  நான்கு பேர் உயிர் தப்பினர், மீதமுள்ள மூவரில் இருவரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

விபத்தின் பின்னர் பிரதீப் சஞ்சீவா காணாமல் போயிருந்த நிலையில் அவரது உடலும் நேற்று மதியம் மாலைத்தீவு மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த சஞ்சீவவின் உடலை நாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version