இலங்கை
யாழில். கோவில் மண்டபத்தில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்!
யாழில். கோவில் மண்டபத்தில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்!
யாழ்ப்பாணம் – அராலி வீரபத்திரர் கோவில் மண்டபத்திலிருந்து முதியவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அராலியைச் சேர்ந்த 81 வயதுடைய முருகேசு கணேசலிங்கம் என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் நேற்றைய தினம் மதியம் வழிபாட்டுக்காக கோவிலிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கோவில் மண்டபத்தில் உயிரிழந்துள்ளார். சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்துவந்தனர்.