சினிமா

ரஜினி – சுந்தர்.சி கூட்டணி உறுதியா.? வெளியான சுவாரஸ்யமான தகவல்கள்..

Published

on

ரஜினி – சுந்தர்.சி கூட்டணி உறுதியா.? வெளியான சுவாரஸ்யமான தகவல்கள்..

தமிழ் சினிமாவின் சகாப்த நாயகனாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தொடர்ந்து தனது வித்தியாசமான கதைக்களங்கள், ரசிகர்களைக் கவரும் நடிப்புத் திறமை என்பவற்றால் திரையுலகை பிரகாசமாக வைத்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்த ‘கூலி’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க, தற்போது அவரின் அடுத்த படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வரவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.தற்பொழுது பரவி வரும் தகவல்களின் படி, ரஜினியின் அடுத்த படத்தை பிரபல இயக்குநர் சுந்தர்.சி இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இது குறித்து தற்போதைய திரையுலக வட்டாரங்களில் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் பரவி வருகின்றன.காமெடி, ஆக்சன் மற்றும் பக்கா என்டர்டெயின்மென்ட் கலந்த திரைப்படமாக இது இருக்கும் எனவும், ரஜினியின் மாஸ் இமேஜை மீண்டும் ரசிகர்கள் பரவசப்படக்கூடிய வகையில் காட்சிப்படுத்தும் படமாகவும் இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தை ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version