இலங்கை
இந்திய இராணுவத்தின் யாழ்.போதனாப் படுகொலைகள் 38ஆவது நினைவேந்தல் இன்று
இந்திய இராணுவத்தின் யாழ்.போதனாப் படுகொலைகள் 38ஆவது நினைவேந்தல் இன்று
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இந்திய இராணுவத்தால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று கடைப்பிடிக்கப்படவுள்ளது. 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 68 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வே இன்று கடைப்பிடிக்கப்படவுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.