இலங்கை
இலங்கையில் குறைந்து வரும் தங்கம் விலை! இன்று எவ்வளவு தெரியுமா?
இலங்கையில் குறைந்து வரும் தங்கம் விலை! இன்று எவ்வளவு தெரியுமா?
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (21) 5,000 ரூபாய் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி சனிக்கிழமை தங்க விலையுடன் ஒப்பிடும்போது இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் 22 கரட் தங்கத்தின் விலை 356,000 ரூபாயாக குறைந்துள்ளது.
அதேவேளை சனிக்கிழமை, தங்க விலை 360,800 ரூபாய் என மதிப்பிடப்பட்டது.
சனிக்கிழமை 390,000 ரூபாயாக இருந்த 24 கரட் தங்கத்தின் விலை இன்று (21) 385,000 ரூபாயாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.