இலங்கை
ஈஸ்டர் தாக்குதல் ; இராணுவ கேணலை கைது செய்ய தடை நீடிப்பு
ஈஸ்டர் தாக்குதல் ; இராணுவ கேணலை கைது செய்ய தடை நீடிப்பு
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரி கே.எஸ். மத்துமகேவை கைது செய்வதைத் தடுக்கும் இடைக்காலத் தடை விதிக்கபப்ட்டுள்ளது.
இந்த உத்தரவை நவம்பர் 11 ஆம் திகதி வரை நீட்டித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த இராணுவ கேணலால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை இன்று (21) மறுபரிசீலனை செய்த பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
சம்பவம் தொடர்பான எந்தவொரு எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளையும் அந்த திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.