இலங்கை

எல்லைக் கற்கள் நடுகை செய்யும் பணி தொடர்பான கலந்துரையாடல்!

Published

on

எல்லைக் கற்கள் நடுகை செய்யும் பணி தொடர்பான கலந்துரையாடல்!

யாழ்ப்பாணம் கோட்டையைச் சுற்றி எல்லைக் கற்கள் நடுகை செய்யும் பணி தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தொல்பொருட் திணைக்களத்தால் எல்லைக் கற்கள் நடுகை செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அது நிறுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் ஆராயப்பட்டது. தொல்பொருட் திணைக்களம், யாழ். மாநகர சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து எஞ்சிய எல்லைக் கற்களை நடுகை செய்யும் பணிகளை முன்னெடுப்பது என இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

Advertisement

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் – காணி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், யாழ். மாநகர சபையின் பொறியியலாளர், தொல்பொருட் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version