இலங்கை
ஓட்டுநர் உரிமத்திற்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்
ஓட்டுநர் உரிமத்திற்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்
கொழும்பு கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விநியோகிக்கப்படும் ஓட்டுநர் உரிமத்திற்கான கட்டணத்தை 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 15 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான வர்த்தமானி அடுத்த வாரம் மீண்டும் வெளியிடப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த வசதி எதிர்காலத்தில் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, பல ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்பும் இலங்கையர்களும் பொருத்தமான கட்டணங்களைச் செலுத்துவதன் மூலம் ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக்கொள்ள முடியுமென வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.