சினிமா

சாராயம் குடிச்ச மாதிரி ஆடாதீங்க.. சொந்த ஊர் ரசிகர்களை சரமாரியாக திட்டிய மாரி செல்வராஜ்

Published

on

சாராயம் குடிச்ச மாதிரி ஆடாதீங்க.. சொந்த ஊர் ரசிகர்களை சரமாரியாக திட்டிய மாரி செல்வராஜ்

மாரி  செல்வராஜ் – துருவ் விக்ரம் இயக்கத்தில் வெளியான பைசன் படத்தின் ரிலீஸை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சையான விவாதம்  எழுந்துள்ளன. பைசன் திரைப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு கடந்த அக்டோபர் 17ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது. இது மாரி  செல்வராஜ் இயக்கிய ஐந்தாவது படமாகும். தமிழக தென்மாவட்டங்களில் சாதியை மையமாக வைத்து,  வன்முறைச் சூழல் பின்னணியில் இருந்து வரும் நாயகன் கபடியில் தேசிய அளவில் சாதித்து காட்டுவதே இந்த படத்தின் மையக் கதையாக இருந்தது. இந்த படத்தில்  துருவ் விக்ரம்  நடித்ததோடு மட்டுமில்லாமல் வாழ்ந்தே காட்டி உள்ளார்.  இதில் பசுபதி, அமீர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்த படத்திற்கு பலர் பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்தாலும் சிலர்  சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மாரி செல்வராஜின் சொந்த ஊரான திருநெல்வேலியில்  படத்தை பார்த்த ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது,  தனது சொந்த ஊர் ரசிகர்களுக்கு மாரி செல்வராஜ் கொடுத்த அட்வைஸ் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.அதாவது பைசன் படத்தை பார்த்த ரசிகர்கள் சத்தமிட்டு ஆரவாரம் செய்தனர். இதனை பார்த்து கோபப்பட்ட மாரி செல்வராஜ், நான் உனக்கு சாராயம் கொடுக்கல,  கத்துறதுக்கு.. உனக்கு நான் புத்தகம் தான் கொடுத்திருக்கின்றேன்… சினிமா புத்தகமாக இருக்கணும்னு தான் ஆசைப்படுகிறேன்.. நான் உனக்கு சாராயம் கொடுத்து ஆட வைக்க வரல.. தயவு செஞ்சு சாராயம் கொடுத்த மாதிரி ஆடாதீங்க..  என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version