இலங்கை
திருகோண மலையில் கனமழை; நெற்செய்கை பாதிப்பு!
திருகோண மலையில் கனமழை; நெற்செய்கை பாதிப்பு!
திருகோணமலையில் மிக நீண்ட நாட்களின் பின் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையில் நெற் செய்கைக்காக விவசாயிகள் தயாராகவுள்ள நிலையில் தம்பலகாமம், கிண்ணியா,முள்ளிப்பொத்தானை உள்ளிட்ட இடங்களில் இன்று வரை கனமழை பெய்து வருவதுடன் தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.
இதனால் தாம் நெற்செய்கையை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.