இலங்கை
நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு
நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையிலான முதன்மை பணவீக்க வீதம், கடந்த செப்டம்பர் மாதத்தில் உயர்வடைந்துள்ளது.
அதன்படி, ஓகஸ்ட் மாதம் 1.5% ஆக இருந்த முதன்மை பணவீக்கம், செப்டம்பரில் 2.1% ஆக உயர்ந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ஓகஸ்ட் மாதத்தில் 2.9% ஆக இருந்த, உணவுப் பணவீக்கம்செப்டம்பரில் 3.8% ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல, உணவு அல்லாத பணவீக்கம் கடந்த மாதம் 0.7% ஆக உயர்ந்துள்ளது. இது ஓகஸ்ட் மாதத்தில் 0.4% ஆக பதிவாகியிருந்தது.
இந்தத் தரவுகள் நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் மக்களின் வாங்கும் திறன் மீதான அழுத்தத்தை எடுத்துரைப்பதாக உள்ளதாக பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.