உலகம்
பாரிஸை தாக்கிய சூறாவளி – ஒருவர் பலி, ஆபத்தான நிலையில் நால்வர்!
பாரிஸை தாக்கிய சூறாவளி – ஒருவர் பலி, ஆபத்தான நிலையில் நால்வர்!
பாரிஸின் வடக்கே உள்ள மாவட்டங்களை சூறாவளி தாக்கியதில் மூன்று கட்டுமான கிரேன்கள் கவிழ்ந்து விழுந்துள்ளது.
இதில் நால்வர் படுகாயம் அடைந்துள்ளதுடன் அவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 23 வயதுடைய இளைஞராவார்.
பாரிஸிலிருந்து வடகிழக்கே சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள எர்மாண்ட் நகரம் திடீர் சூறாவளியால் மிக மோசமாக பாதிக்கப்பட்டது, இது சுமார் 10 மாவட்டங்களில் சேதத்தை ஏற்படுத்தியது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்கள் மூன்று கிரேன்கள் ஒன்றன்பின் ஒன்றாக விழுவதைக் காட்டியுள்ளன.
லங்கா4 (Lanka4)
அனுசரணை