இலங்கை

புதிய கல்லடி பாலத்தில் திறந்து வைக்கப்பட்ட அலங்கார மின்னொளி வளைவு!

Published

on

புதிய கல்லடி பாலத்தில் திறந்து வைக்கப்பட்ட அலங்கார மின்னொளி வளைவு!

தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் புதிய கல்லடி பாலத்தில் அமைக்கப்பட்ட அலங்கார மின்னொளி வளைவு திறந்துவைக்கப்பட்டது.

இன்று இந்துக்கள்  தீபாவளி பண்டிகையை கொண்டாடும் நிலையில் அதனை சிறப்பிக்கும் வகையில் இந்த அலங்கார மின்னொளி வளைவு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநகரசபை பிரதி முதல்வர் டினேஸ், மாநகரசபை ஆணையாளர் என்.தனஞ்செயன், மாநகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டு திறந்துவைத்தனர். மின்னொளி அலங்கார வளைவு திறக்கப்பட்டதை தொடர்ந்து வானவேடிக்கைகளும் நடைபெற்றது.

நிகழ்வின்போது தீபாவளி வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டதுடன் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு இதனை பார்வையிட்டு வருகின்றனர்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version