இலங்கை

பொலிஸார் வராமல் வரமாட்டேன்; தாக்குதலில் காயமடைந்தவர் அடம்பிடிப்பு

Published

on

பொலிஸார் வராமல் வரமாட்டேன்; தாக்குதலில் காயமடைந்தவர் அடம்பிடிப்பு

     தாக்குதலில் காயமடைந்த நபர் ஒருவர், பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரும் காத்திருந்து, பின், மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் (21) காலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

Advertisement

தனிப்பட்ட தகறாறு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில், தாக்குதலுக்குள்ளான நபரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல பலரும் முயற்சித்தபோது, காயமடைந்த நபர், சம்பவ இடத்துக்கு பொலிஸார் வந்தால் மாத்திரமே வைத்தியசாலைக்குச் செல்வேன் என பிடிவாதமாக இருந்துள்ளார்.

அதன் பின்னர், குறித்த இடத்துக்குச் சென்ற வாழைச்சேனை பொலிஸார், காயமடைந்த நபரை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

Advertisement

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வாழைச்சேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version