இலங்கை
மருந்துகளுக்கான விலைச் சூத்திரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
மருந்துகளுக்கான விலைச் சூத்திரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
மருந்துகளுக்கான விலைச் சூத்திரம் இன்று (21) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மருந்துகளுக்கான விலைச் சூத்திரம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்படி, ஒவ்வொரு வகை மருந்துகளுக்கும் அதிகபட்ச விலை வரம்பு நிர்ணயிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைச் சட்டத்தின் கீழ் ஒரு உத்தரவாக இது இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.