இலங்கை

யாழ் கடற்பகுதிகளில் அதிகரிக்கப்படும் பாதுகாப்பு, தீவிர கண்காணிப்பில் விஷேட புலனாய்வாளர்கள்!

Published

on

யாழ் கடற்பகுதிகளில் அதிகரிக்கப்படும் பாதுகாப்பு, தீவிர கண்காணிப்பில் விஷேட புலனாய்வாளர்கள்!

யாழ் குடாநாட்டின் கடல் பகுதியில் அதிகமாக கடற்படை கண்காணிப்பும் ரோந்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பிரதானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிலாபம், தெவுந்துர கடல் பகுதிகளிலும் கடற்படை ரோந்துகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

Advertisement

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் யாழ்ப்பாணம் கடல் மார்க்கத்தை அதிகம் பயன்படுத்துதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும், யாழ் கடல் மார்க்கத்திலேயே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் தப்பிச் செல்வதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு சிலாபம் – தெவுந்துர கடல் பகுதிகளிலும் போதை பொருள் கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெறுவதாகவும் அதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதான புலனாய்வு தகவல்களை அடுத்தே இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisement

கடந்த காலத்தில் கஞ்சிபானி இம்ரான் யாழ் கடல் வழியாகவே இந்தியா தப்பில் சென்றார். அண்மையில் நோபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியும் ஜே.கே.பாய் போன்றவர்களும் யாழ்ப்பாணத்தில் இருந்தே கடற்றொழில் படகின் மூலம் இந்தியாவுக்குச் சென்றதாக அறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version