இலங்கை
யாழ். போதனா மருத்துவமனையில் நீரிழிவுச் சிகிச்சைக்கு விரிவடைந்தது சேவை
யாழ். போதனா மருத்துவமனையில் நீரிழிவுச் சிகிச்சைக்கு விரிவடைந்தது சேவை
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் நீரிழிவுச் சிகிச்சை நிலையத்தின் சேவைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் நீரிழிவுச் சிகிச்சை நிலையத்தின் சேவைகள் தற்போது வெளிநோயாளர் கட்டடத் தொகுதியின் முதலாம் மாடியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வெளிநோயாளர் மற்றும் விபத்துச் சிகிச்சைக் கட்டடத் தொகுதிகளுக்கு இடையிலான பகுதியில் இரத்தப் பரிசோதனை மாதிரிகளை வழங்கும் பகுதி இடமாற்றம் செய்யப்பட்டு, கடந்த சில தினங்களாகச் செயற்படத் தொடங்கியுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் நோயாளிகளுக்கு ஏற்படும் நெரிசல்கள் குறைக்கப்படுவதுடன் பரிசோதனைகளுக்காக இரத்த மாதிரிகளை வழங்கும் நபர்கள் இலகுவாக குறித்த பகுதியில் தேவையான சேவைகளைப் பெறுவதற்கான சூழல் உருவாகியுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.