இலங்கை

ருஹுணு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமறியல்

Published

on

ருஹுணு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமறியல்

   கைது செய்யப்பட்ட ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்கள் குழுவை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிம்னறம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை மாத்தறை நீதவான் நீதிமன்றம், இன்று (21) பிறப்பித்துள்ளது.

Advertisement

நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது மதிப்பெண்கள் தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தின், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஆறு மாணவர்கள் காயமடைந்திருந்தனர்.

சம்பவம் ஆரம்பத்தில் சுமுகமாக தீர்க்கப்பட்டாலும், நேற்று (20) மீண்டும் பதட்டங்கள் ஏற்பட்டதையடுத்து, மோதல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த, பல்கலைக்கழக நிர்வாகம் திங்கட்கிழமை, மாணவர்களை பீட வளாகத்திலிருந்து தற்காலிகமாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version