இலங்கை
அதிக ஆண்களுக்கு வாய்ப்புற்றுநோய்
அதிக ஆண்களுக்கு வாய்ப்புற்றுநோய்
இலங்கையில் ஆண்கள் அதிகம் வாய்ப்புற்றுநோய்க்கு முகங்கொடுக்கின்றனர் என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் வயது வந்தவர்கள் பல நோய்களால் பாதிக்கப்படுவது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலைமைகளிலிருந்து குழந்தைகள் மற்றும் மக்களைப் பாதுகாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் சுகாதார கல்வித் திட்டங்களைச் செயற்படுத்தவேண்டும் நாட்டில் ஆண்களிடையே வாய்ப்புற்று நோய் பெரும் பிரச்சினையாக உள்ளது. வாய்ப்புற்றுநோயைத் தடுப்பதற்கு முற்கூட்டியே கண்டறிவது அவசியம்- என்றார்.