இலங்கை
ஆசிரியர்களுக்கு உளவியல் பயற்சி!
ஆசிரியர்களுக்கு உளவியல் பயற்சி!
மாணவர்கள் மத்தியில் நிலவும் மன அழுத்தத்தைக் குறைக்க தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பட்டம் பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் உளவியல் பயிற்சியை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த அமைச்சின் செயலாளர் நலகா கலுவேவா, நாட்டில் உள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் தேசிய கல்வியியற் கல்லூரிகள் மூலம் வருகிறார்கள். எனவே, அவர்களின் ஆசிரியர் கல்வியின் ஒரு பகுதியாக உளவியல் பயிற்சியை அறிமுகப்படுத்த அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது – என்றார். இதேவேளை இலங்கையில் 60 வீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், உயர்தரங்களில் உள்ள 24 வீத மாணவர்கள் குறிப்பிடத்தக்க அறிகுறிகளைக் காட்டுகின்றனர் எனவும் அண்மைய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.