பொழுதுபோக்கு

எம்.ஜி.ஆர் கொடுத்த ஊக்கம்… ஒரு படத்தில் நடிக்க வந்து 55 படங்களில் ஒப்பந்தம்; இந்த சூப்பர் ஸ்டார் நடிகர் யார் தெரியுதா?

Published

on

எம்.ஜி.ஆர் கொடுத்த ஊக்கம்… ஒரு படத்தில் நடிக்க வந்து 55 படங்களில் ஒப்பந்தம்; இந்த சூப்பர் ஸ்டார் நடிகர் யார் தெரியுதா?

இன்றைய காலக்கட்டத்தில் மிகப்பெரிய நடிகர் என்றால் ரஜினி, கமல், விஜய், ஷாருக்கான் என பல நடிகர்களை சொல்லலாம். இவர்களின் படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து பல தோல்விகளையும் சந்தித்துள்ளன. ஆனால்,  இந்திய அளவில் அதிக வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் என்றால் அது மலையாள நடிகரான பிரேம் நசீர் தான். கேரளாவின் திருவனந்தபுரத்தில், 1926 -ஆம் ஆண்டு பிறந்த பிரேம் நசீர் கடந்த 1952-ல் வெளியான ‘மருமகள்’ என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் கால்பதித்தார். தொடந்து, 1979-ஆம் ஆண்டில் மட்டும் 39 படங்களில் நடித்து உலக சாதனைப் படைத்தார். மேலும் இவர் தனது சினிமா பயணத்தில் 34 முறை இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஒரே ஆண்டில் இரண்டு முறை 30 படங்களுக்கும் மேல் மற்றும் பல முறை 20 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். பிரேம் நசீர் ஹீரோவாக நடித்த 350 முதல் 500 படங்கள் வரை பாக்ஸ் ஆபிஸில் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. இதில் 50-க்கும் மேற்பட்ட படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளன. பிரேம் நசீர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் 700 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். உலகில் அதிக திரைப்படங்களில் நடித்த ஹீரோ என்ற சாதனைக்குச் சொந்தக்காரரே இவர் தான். இந்தச் சாதனை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. இவர் மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.நடிகர் பிரேம் நசீர் பழைய நேர்காணல் ஒன்றில் தமிழ் திரைப்படத் துறையில் தான் நுழைந்தது பற்றியும், மூத்த நடிகரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் வார்த்தைகள் தனக்கு எப்படி நம்பிக்கை அளித்தது என்பது பற்றியும் மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, “ஒரு நாள் என் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் எம்.ஜி.ஆரை முதன் முதலில் சந்தித்தேன். அவருக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டது. ஏன் உங்களை மலையாள சினிமாவில் சுருக்கிக் கொள்கிறீர்கள். தமிழ் படங்களிலும் நடிக்கலாம் அல்லவா? என்று கேட்டார். நான் எனக்கு தமிழ் மொழி சரளமாக பேசியத் தொரியாது என்று பதிலளித்தேன். அதை கேட்ட எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடிக்க இவ்வளவு தமிழ் போதும் என்றார். தொடர்ந்து, தயரிப்பாளர் ஏ.கே.வேலவன் தனது ‘தை பிறந்தாளல் வழி பிறக்கும்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க என்னை அணுகினார். அதில், எம்.எஸ்.ராஜேந்திரன் மற்றொரு கதாபாத்திரத்தில் நடிப்பார்” என்றார்.மேலும், தனது தமிழ் மிகவும் பலவீனமாக உள்ளது என்று தான் வேலனிடம் தெரிவித்ததாகவும், அதை நிரூபிக்க அவருடன் தமிழிலேயே பேசியதாகவும் நாசர் கூறினார். இருப்பினும், திரைப்படத் தயாரிப்பாளர் அதைப் பற்றிக் கவலைப்படாமல், உடனடியாக தமிழ்நாட்டிற்கு வருமாறு கேட்டுக் கொண்டாராம். தொடர்ந்து, மூன்று, நான்கு நாட்களுக்கு பிறகு சென்னை சென்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு நடிகர் பிரேம் நசீர் அந்த படத்தில் நடித்த நிலையில் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததாகவும், அதன்பின்னர் தனக்கு நிறைய வாய்ப்புகள் வந்ததாகவும் நசீர் கூறியுள்ளார்.தமிழில் ஒரு படத்தில் நடிக்க சென்று ஒரே வருடத்தில் 55 படங்களில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன் என்று நசீர் கூறியுள்ளார். நடிகர் நசீர், ‘நல்ல இடத்து சம்பந்தம்’, ‘நான் வளர்த்த தங்கை’, ‘பெரிய கோவில்’, ‘அருமை மகள் அபிராமி, ‘உழவுக்கு தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’, ‘ ஒரே வழி’, ‘கல்யாணிக்கு கல்யாணம்’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘சகோதரி’, ‘இருமனம் கலந்தாள் திருமணம்’ போன்ற பல தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version