இலங்கை

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை; யாழ் அச்சுவேலியில் அதிகளவான மழைவீழ்ச்சி

Published

on

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை; யாழ் அச்சுவேலியில் அதிகளவான மழைவீழ்ச்சி

   நாட்டில் நிலவும் மழையுடனான  காலநிலை நிலவும் நிலையில் , யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலேயே அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, அச்சுவேலியில் 112.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் நயினாதீவில் 112.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அத்துடன், நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55- 60 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும்.

திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 55 கிலோ மீட்டர் வரை வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version