இலங்கை

காத்திரமான நகர்வுகளை மேற்கொள்ளும் இளம்குமரனுக்கு குவியும் பாராட்டுக்கள்!

Published

on

காத்திரமான நகர்வுகளை மேற்கொள்ளும் இளம்குமரனுக்கு குவியும் பாராட்டுக்கள்!

சரவணபவன் போன்ற ஒரு வைத்தியர் மற்றும் ராஜுவன் போன்ற ஒரு அதிபர் வெற்றி பெற்ற இடத்தில் அதே கட்சியில் என்ன கல்வித் தகமை என்று தெரியாத இளங்குமரன் எப்படி வெற்றி பெற்றான்? என்று கேள்வி கேலி செய்தோம்.

போதாக்குறைக்கு இளங்குமரன் ஆரம்பத்தில் பேசிய பேச்சுக்கள் எல்லாம் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்க்கு தீனி போட்டது.

Advertisement

இப்போதைய நிலைமையில் யோசித்துப் பாருங்கள், வைத்தியர் பொது வெளியில் வந்து ஒரு பேட்டி கொடுக்கவே முடியாதளவு இருக்கின்றார்.

ரஜிவன் என்ன செய்வது என்று தெரியாமல் சாயல் இருக்கிறது, பேயல் என்று சொல்லி மீம்ஸ் கிரியேட்டர்ஸ்க்கு தீனி போடும் மூன்றாம்  அரசியல் செய்கின்றார்.

ஆனால் இளங்குமரன் பேசும் பேச்சுக்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.
மூன்று மாதத்திற்கு முன்பு இளங்குமரன் பேசுகின்ற விதத்திற்கும் இப்போது பேசுகின்ற விதத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

Advertisement

இந்த மூன்று பேரிலும் அரசியல் ரீதியாக கட்சியில் இயங்கியவர் இளங்குமரன் மட்டுமே.

மற்ற இருவருக்கும் தர்க்க ரீதியான அரசியல் தெரியவில்லை. அதனால் அவர்களை கட்சியால் கூட வழி நடத்த முடியவில்லை. ஆனால் இளங்குமரனை கட்சி வழி நடத்துகிறார்கள்.

இப்போதே அதிபரையும், வைத்தியரையும் கட்சியை கை விட்டு விட்டது அந்த கட்சி.

Advertisement

தமிழர்களிடம் இல்லாத அரசியல் இதுதான்.

நம்மிடம் தர்க்க ரீதியான அரசியல்வாதிகள் அல்லது அரசியல் கட்சிகள் இல்லை. 

அடுத்த கட்ட தலைவர்களை வழிநடத்த அரசியல் கட்டமைப்பு இல்லை.

Advertisement

எங்களிடம் உண்மையில் அரசியல் கொள்கைகளை வடிவமைத்து தர்க்க ரீதியாக செயற்பட்ட கட்சிகள் ஒருகாலத்தில் இருந்தன.

தந்தை செல்வா ஒரு விதமான அரசியலை கொண்டு நடத்தினார்.
ஜி ஜி பொன்னம்பலம் இன்னொரு விதமான அரசியலை கொண்டு நடத்தினார்.

அந்த இரண்டு கட்சிகளும் இன்று குழம்பிப் போயிருக்கின்றது.

Advertisement

காரணம் இப்போதைய நிலைமையில் தந்தை செல்வாவின் அரசியல் கொள்கைகளின் வாரிசாக சுமந்திரன் இருக்கின்றார்.


ஜிஜி பொன்னம்பலத்தில் அரசியல் கொள்கைகளின் வாரிசாக வாரிசாக கஜேந்திரகுமார் இருக்கின்றார்.

பிரச்சினை இங்கேதான் தொடங்குகிறது.

Advertisement

-(சிவச்சந்திரன் சிவஞானம் அவர்களின் முக நூல் பதிவில் இருந்து )-

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version