இலங்கை
செவ்வந்திக்கு அடைக்கலம்; கிளிநொச்சியில் இருவர் கைது!
செவ்வந்திக்கு அடைக்கலம்; கிளிநொச்சியில் இருவர் கைது!
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி மறைந்திருப்பதற்கு அடைக்கலம் கொடுத்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி அம்பாள்குளம் மற்றும் உதயநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.