இலங்கை
செவ்வந்தி வழங்கிய வாக்குமூலம்: பிரதான ஆட்கடத்தல்காரர் கிளிநொச்சியில் கைது!
செவ்வந்தி வழங்கிய வாக்குமூலம்: பிரதான ஆட்கடத்தல்காரர் கிளிநொச்சியில் கைது!
இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை, சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் பிரதான ஆட்கடத்தல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பகுதியில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் நேபாளத்திலிருந்து கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி வழங்கிய தகவலுக்கு அமைய, குறித்த ஆட்கடத்தல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை