இலங்கை
தமிழருக்கு அளித்த உறுதிப்பாட்டை இந்தியா நிறைவேற்றத் தவறியுள்ளது; தயான் ஜயதிலக சுட்டிக்காட்டு!
தமிழருக்கு அளித்த உறுதிப்பாட்டை இந்தியா நிறைவேற்றத் தவறியுள்ளது; தயான் ஜயதிலக சுட்டிக்காட்டு!
வடக்கு மற்றும் கிழக்குத் தமிழ் மக்களுக்காக, 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா திறந்துவிட்ட மாகாண அரசியலை முடக்குவது, இந்திய இராஜதந்திரத்தின் முரணாகும் என்று கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகளுக்கான தேர்தல் தொடர்ச்சியாகத் தாமதிக்கப்பட்டு வரும் நிலைமை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம், அதன் முகப்புரையில் அரசியல் அதிகாரப்பரவலாக்கல் குறித்த தனது உறுதிப்பாடுகளை நிறைவேற்றுமாறு இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது உட்பட, உள்ளூர் நிர்வாகத்தை மதிக்குமாறு அரசாங்கத்தை ஊக்குவிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாகாணசபைத்தேர்தல்களை நடத்தவும், அத்தேர்தல் தடைப்பட்டிருப்பதற்குக் காரணமாக இருக்கும் சட்டவிடயத்தைத் தீர்க்கவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வடக்கு மற்றும் கிழக்குத் தமிழ் மக்களுக்காகத் திறந்து விட்ட மாகாண அரசியல்வெளி இந்திரா காந்தியின் சிறப்புத் தூதுவராக இருந்த ஜி.பி. பார்த்தசாரதியின் இளம் உதவியாளராக இருந்த தற்போதைய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. சுப்ரமணியம் ஜெய்சங்கர் உட்பட இந்திய அரசாங்கம் ஆதரிக்கும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிர்வாகத்தால் மூடப்படுவது இந்திய இராஜதந்திரத்தின் முரணாகும். ஒருவேளை தமிழ் மக்களுக்கான அரைசுயாட்சி அரசியல் வெளியான மாகாணசபை முறைமையானது. இந்தியா, மற்றும் அநுரகுமார அரசாங்கத்தின் கூட்டு இலாபங்களை அடைவதற்காகவும் மூலோபாயத் தட்யத்துக்காகவும் பண்டமாற்றுச் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் சீனா எப்போதும் இலங்கைக்கு அளித்த உறுதி மொழிகளை நிறைவேற்றியேயுள்ளது. ஆனால் இந்தியா வடக்கு மற்றும் கிழக்குத் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பரவலாக்கல் குறித்து அளித்த உறுதிப்பாட்டை நட்புரீதியான, நன்றியுள்ள அரசாங்கம் 4 ஆட்சியில் இருந்தபோதிலும். அதனை நிறைவேற்றுவதற்குத் தவறியுள்ளது- என்றார்.