இலங்கை

திருகோணமலை மாவட்டத்தின் முதல் மருத்துவ நிர்வாக கலாநிதி பட்டதாரி டாக்டர் போல் ரொஷான்…!!

Published

on

திருகோணமலை மாவட்டத்தின் முதல் மருத்துவ நிர்வாக கலாநிதி பட்டதாரி டாக்டர் போல் ரொஷான்…!!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பட்டப்பின்படிப்பு நிறுவனத்தினால் ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்ட மருத்துவ நிர்வாக கலாநிதி பட்ட இரண்டாம் நிலை (M.D. in Medical Administration Part II) பரீட்சையில் வைத்தியர் ஞானகுணாளன் போல் ரொஷான் சித்தியடைந்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இக்கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொள்வது இதுவே முதற் தடவையாகும்.

Advertisement

இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மருத்துவ நிர்வாகிகளில் இத்தகுதியை உடையோர் மிகச் சிலரே ஆவர்.

இவர் தனது வைத்தியத்துறைப் பயணத்தை திருகோணமலை பொது வைத்தியசாலையில் பயிற்சி வைத்தியராக ஆரம்பித்தார். 

இதன் பின் மொறவெவா ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடமையாற்றினார். 

Advertisement

காட்டு யானைகளின் தாக்குதல்களினால் பின்தங்கிய நிலைமையிலிருந்த மொறவெவா வைத்தியசாலையை தனது வழிகாட்டலின் கீழ் திருகோணமலை மாவட்டத்தின் சிறந்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம் என்ற ஸ்தானத்திற்கு 2018 ல் கொண்டு வந்தார்.

இதன் பின் வைத்திய நிர்வாக துறையில் தன் பயிற்சியை ஆரம்பித்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மற்றும் கந்தளாய் ஆதார வைத்தியசாலை போன்றவற்றின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றியுள்ளார்.

மருத்துவ நிர்வாக பட்டங்களுக்கு மேலதிகமாக சுகாதார மேலாண்மை, தரம் மற்றும் நோயாளி பாதுகாப்பு, மற்றும் சுகாதார மேம்பாடு போன்ற துறைகளில் தேசிய மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களில் பல உயர் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

Advertisement

திருகோணமலை இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரியின் பழைய மாணவரான வைத்தியர் ரொஷானின் இச்சாதனையானது மருத்துவ நிர்வாக துறையில் பங்களிக்க விரும்பும் மருத்துவர்களுக்கும், மாணவர்களுக்கும், குறிப்பாக தமிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஊக்கம் மற்றும் உத்வேகம் அளிப்பதாய் உள்ளது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version