இலங்கை

திருமணத்திற்கு மறுப்பு; அண்ணியாரின் செயலால் அதிர்ந்த குடும்பம்!

Published

on

திருமணத்திற்கு மறுப்பு; அண்ணியாரின் செயலால் அதிர்ந்த குடும்பம்!

   தங்கையிடம் பழகி, பின்னர் கழற்றி விட்டு மற்றொரு பெண்ணுடன் பழக ஆர்வம் காட்டியதால், ஆத்திரம் அடைந்த அண்ணி கொழுந்தனின் பிறப்புறுப்பை அறுத்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,

Advertisement

இந்தியா உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அடுத்த புர்ஹான் பகுதியை சேர்ந்தவர் யோகேஷ். பொறியியலாளரான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருந்தது.

யோகேஷின் அண்ணன் மனைவி அர்ச்சனா. தனது தங்கையை தான் யோகேஷ் திருமணம் செய்ய வேண்டும் என அர்ச்சனா கூறி வந்தார்.

Advertisement

இந்த நிலையில் யோகேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் ஆனதால் அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு விடுமுறையில் யோகேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார்.

தீபாவளி பூஜை முடிந்தவுடன் அர்ச்சனா யோகேஷை தனது அறைக்கு வரவழைத்துள்ளார்.

அப்போது தனது தங்கையை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு யோகேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Advertisement

எனது தங்கையைத் தவிர வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது.

எனது தங்கைக்கு கிடைக்காதவர் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என கூறியபடி கத்தியை எடுத்து யோகேஷின் மர்ம உறுப்பை வெட்டி வீசி எறிந்துள்ளார்.

வலியால் துடித்த யோகேஷை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

Advertisement

அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார், அர்ச்சனாவை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இச்சம்பம பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version