டி.வி

தூங்கினது ஒரு குத்தமா? நாயை குறைக்க விட்ட பிக்பாஸ்.! திவாகருக்கு கனி கொடுத்த தண்டனை.!

Published

on

தூங்கினது ஒரு குத்தமா? நாயை குறைக்க விட்ட பிக்பாஸ்.! திவாகருக்கு கனி கொடுத்த தண்டனை.!

பிக்பாஸ் சீசன் 9 தற்போது மிகுந்த பரபரப்புடனும், கலகலப்புடனும் ஒளிபரப்பாகி வருகிறது. தினந்தோறும் வீட்டிற்குள் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்கள், போட்டியாளர்களின் உறவுகள், கிண்டல்கள், சண்டைகள் என அனைத்து அம்சங்களும் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளன.இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு காமெடி சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இதன் மையக் கதாபாத்திரமாக இருப்பவர், ரசிகர்களிடையே “வாட்டர் மெலன் ஸ்டார் ” என அழைக்கப்படும் திவாகர். பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் ஓய்வெடுக்க நேரம் என்பதே குறைவாகவே இருக்கும். ஆனால், சில நேரங்களில் சிலர் தவறுதலாக தூங்குவதும் நடக்கிறது. அதுபோலதான், திவாகர் பகல் நேரத்தில் நித்திரையில் மூழ்கியிருந்தார்.அந்த தருணத்தில், பிக்பாஸ் நாய் கத்தும் சவுண்டை (barking sound) ஒலிக்கச் செய்தார். அந்த சவுண்ட் கேட்டவுடன், திவாகர் பயந்து திடுக்கிட்டு எழுந்து நின்றார். திவாகர் தூங்கியதை பார்த்ததும், வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் அவரை சற்று கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.பின் கனி, நித்திரை கொண்டதற்கு தண்டனையாக 50 தோப்புக் கரணம் போட வேண்டும் என்று சொல்லுறார். அதைக் கேட்ட திவாகரும் 50 தோப்புக் கரணம் போட அதனை கலையரசன் எண்ணுகின்றார். இவ்வாறாக பிக்பாஸ் 9 இப்போதைக்கு பரபரப்பாக நடைபெறுவதோடு மட்டுமல்லாமல், சிறப்பான தருணங்களும் இடம்பெற்று வருகின்றது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version