இலங்கை

பெரமுன மீது வீண்பழி; சி.ஐ.டியில் முறைப்பாடு

Published

on

பெரமுன மீது வீண்பழி; சி.ஐ.டியில் முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் உட்பட கட்சியை இழிவுபடுத்தும் நோக்கில், திட்டமிட்ட முறையில் பொய்யான பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று குற்றஞ்சாட்டி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பசன்கஸ்தூரி பெர்னாண்டோ தெரிவிக்கையில், தவறான தகவல்கள் முதன்மையாக சமூக ஊடகங்கள் மூலம் பரவிவருகின்றது. போதைப்பொருள் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்களைக் கைதுசெய்ய வழிவகுத்த பொலிஸ் நடவடிக்கைகளால் இது இன்னும் தீவிரமடைந்துள்ளது.

Advertisement

சில குழுக்கள் சந்தேகநபர்களை எமது கட்சியுடன்பொய்யாக தொடர்புபடுத்தி, விசாரணைகளை அரசியலாக்க முயற்சிக்கின்றனர். பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலைவழக்கின், சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்ட பின்னர். கூடுதலான வதந்திகள் பரப்பப்படுகின்றன.

பெரமுனவைக் குற்றச்செயல்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாக சித்திரிக்க வேண்டுமென்றே முயற்சி நடக்கின்றது. கடந்த காலங்களில் இதேபோன்ற கூற்றுகள் எந்தவொரு துணை ஆதாரமும் இல்லாமல் சட்டபூர்வமாக சவால் செய்யப்பட்டன. இந்த விடயத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தவேண்டும்-என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version