இலங்கை
மருதானை பேர வாவியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்!
மருதானை பேர வாவியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்!
மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேர வாவியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 55 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண் எனவும், அவர் கறுப்பு நிற காற்சட்டை மற்றும் பச்சை நிற நீண்ட கை சட்டை அணிந்திருப்பதாக பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர். உடற்கூற்றுப் பரிசோதனைக்குப் பின்னர், சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில், மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.