சினிமா
மாரி..! உங்களை நம்ப முடியல… – பைசன் படத்தைப் பார்த்த ரஜினி சொன்ன ரிவ்யூ இதோ.!
மாரி..! உங்களை நம்ப முடியல… – பைசன் படத்தைப் பார்த்த ரஜினி சொன்ன ரிவ்யூ இதோ.!
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். சமூகப் பதிவுகளையும், ஆழமான கதைகளையும் திரைப்படத்திற்குள் நுழைக்கும் இவரது திரைப்படங்கள், சினிமாவை வெறும் பொழுதுபோக்காக அல்ல, ஒரு சமூகத்திற்கான கண்ணாடியாக மாற்றி வருகின்றன.‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களின் தொடர்ச்சியாக, மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் மூன்றாவது திரைப்படம் தான் பைசன். இப்படம் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சமூக நீதியையும், அழுத்தமான அரசியல் கூறுகளையும் கொண்டிருந்த இப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், பைசன் படம் பற்றி தற்போது ஒரு பெரும் திருப்பம் நடந்துள்ளது. அதாவது, இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த், பைசன் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நேரடியாக தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியுள்ளார் என்பது பெரும் அசத்தல் செய்தியாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.பைசன் படம், கபடி விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த ஒருவர் மற்றும் அதற்குப் பின்னால் உள்ள சமூகக் கூறுகளை விவரிக்கிறது. இதில் துருவ் விக்ரம் மாபெரும் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு மேலாக, படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் மாரி செல்வராஜின் இயக்கக் கையெழுத்து பளிச்சென தெரிகிறது.சமீபத்தில் வந்த தகவலின்படி, பைசன் படத்தை பார்த்த ரஜினிகாந்த்,”பைசன் படத்தைப் பார்த்தேன்.படத்துக்கு படம் உங்கள் உழைப்பும், ஆளுமையும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது மாரி. வாழ்த்துக்கள். ” என்று கூறியுள்ளார். இந்தத் தகவல்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.