இலங்கை
மிகச்சிறந்த நிதி மேலாண்மை; மத்திய வங்கி ஆளுாருக்கு வொஷிங்டனில் கௌரவம்!
மிகச்சிறந்த நிதி மேலாண்மை; மத்திய வங்கி ஆளுாருக்கு வொஷிங்டனில் கௌரவம்!
மிகச்சிறந்த நிதிமுகாமைத்துவத்துக்காக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கு அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனில் வைத்து “ஏ” தர விருது வழங்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் வருடாந்த கூட்டத்தொடருடன் இணைந்த வகையில், குளோபல் பைனான்ஸ் பத்திரிகையால் இந்த விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் விவேகமான பணவியல் கொள்கைகள் நாட்டின் நிதி அமைப்பை நிலைப்படுத்துவதில் அவரது பங்களிப்பு மற்றும் சவாலான உலகளாவிய நிலைமைகளுக்கு மத்தியில் அவரது மூலோபாய மேலாண்மை ஆகியவற்றை அங்கீகரித்து இந்த விருது வழங்கப்படுவதாக குளோபல் பைனான்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
குளோபல் பைனான்ஸ் பத்திரிகை வருடந்தோறும் நம்பகத்தன்மை பணவீக்கக் கட்டுப்பாடு நாணய நிலைத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பவற்றின் அடிப்படையில் மத்திய வங்கி ஆளுநர்களை மதிப்பீடு செய்து விருதுகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.