இலங்கை
வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா பயிரிட்டவர் கைது
வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா பயிரிட்டவர் கைது
காலி, அக்மீமனப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப்பிரஜை ஒருவர் காலி மாவட்ட குற்றத் தடுப்புப்பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவராவார்.
இவர் அக்மீமனப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டு இரண்டு அறைகளில் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சாச் செய்கையை மேற்கொண்டுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு விற்பனை செய்யும் நோக்கத்தில் கஞ்சாவை அவர் பயிரிட்டுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வீடு மருத்துவர் ஒருவருக்குச் சொந்தமானது எனவும் சந்தேகநபரான வெளிநாட்டுப்பிரஜை இந்த வீட்டை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா மாதாந்த வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டுள்ளார் என்றும் தெரியவருகின்றது .