இலங்கை

விமான இருக்கையில் சிறுநீர் கழித்த இளைஞர்; கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

Published

on

விமான இருக்கையில் சிறுநீர் கழித்த இளைஞர்; கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

  அமெரிக்காவில் ஆண்டுக்கு ரூ. 4 கோடிக்கும் மேல் சம்பாதிக்கும் ஒரு ஐஐடி பட்டதாரி இளைஞர், 16 மணி நேர விமானப் பயணத்தில் 11 பீர் பாட்டில்கள் குடித்துவிட்டு அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவருடன் பயணித்த கெளரவ் கேதர்பால் என்பவர் ‘X’ தளத்தில் இச்சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
விமான பணிப்பெண் மூன்று பாட்டில்களுக்கு மேல் கொடுக்க மறுக்கவே, அந்த இளைஞர் நண்பர்கள் மூலம் கூடுதல் பீர் வாங்கி அளவுக்கு அதிகமாக அருந்தியுள்ளார்.

Advertisement

மதுபோதையில் அவரால் இருக்கையிலிருந்து எழ முடியாமல் இருக்கையிலேயே சிறுநீர் கழித்து விட்டார்.

துர்நாற்றம் காரணமாக அருகில் இருந்தவர்கள் வேறு இருக்கைக்கு மாற வேண்டியிருந்தது.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகவே, நெட்டிசன்கள் கெளரவை கேள்வி கேட்க தொடங்கினர்.

Advertisement

ஏனெனில், கெளரவும் தனது பங்கு பீரை அந்த இளைஞருக்கு கொடுத்திருந்தார்.

“மது அருந்த உதவியவர்கள் முதலில் தங்கள் செயலை திருத்தி கொள்ள வேண்டும்” என்றும், “விமானப் பணிப்பெண் எச்சரித்தும் நீங்கள் விதிமுறையை மீறிவிட்டீர்கள்” என்றும் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version