இலங்கை
வீழ்ச்சியுறும் வாகன விலை!
வீழ்ச்சியுறும் வாகன விலை!
ஜப்பானில் வாகனவிலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை 15 இலட் சம் ரூபா வரை குறைவடைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார்.
அங்கீகரிக்கப்படாத வாகன இறக்குமதிகள் உள்ளூர் சந்தையில் பதிவுசெய்யப்படாத வாகனங்களின் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2025 ஜனவரி மற்றும் ஓகஸ்ட் மாதங்களுக்கு இடையில் தனிப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக 705 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.